India is a powder keg.
One ethnicity is bound to be exploited and announce their independence.
I always found Tamil Indians different from the rest.
They are usually smart, nice, and don't have hate towards Muslims or Pakistan.
I feel like Indians in general ride on the backs of the successful segments of their society.
Im a Tamilan, we belive in "yaathum oore yaavarum kelir".
we never have hate towards muslims/christians/jews/parsis/white/black/yellow. but never friendly of like whom ever want to hurt or to divide us, I stands with my India with my Bro's & sis's from all over India, we fight with us like how a bro-sis-bro-sis fights at home. when ever we have a external enemy we stand united...
Tamil Punch to whom want to divide us:
"poongada pikalii payaluingalaaaa...!"
Details of "yaathum oore yaavarum kelir"
சங்க இலக்கியத்தைச் சேர்ந்த, எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றில், கணியன் பூங்குன்றனார் என்னும் புலவர், "யாதும் ஊரே, யாவரும் கேளிர்'' (புறம் 192) என்று தொடங்கும் இப்பாடலில் உலகம் முழுவதையும் ஒரு குடும்பமாகக் காணவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மனித குலம் முழுவதையும் ஒன்றாகக் கண்ட அவர்தம் விரிந்த பரந்த உள்ளம் இதில் புலனாகிறது. ஔவையார் அவர்கள், ஒரு நாடு பெருமையும் சிறப்பும் அடைய வேண்டும் எனின், அதில் வாழும் மாந்தரே அதற்குப் பொறுப்பாக வேண்டும் என்று, அதாவது வாழ்வாங்கு வாழவேண்டும் என்று
".................
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே'' (புறம் 177)
என்று அழகாகப் புலப்படுத்தியுள்ளார்.
ரிக் வேதத்தின் ஒரு பகுதியான புருஷஸுக்கத்தில் "உலகத்திலுள்ள அனைவருக்கும், விலங்குகள், பறவைகள் போன்ற எல்லா உயிரினங்களுக்கும் மங்கலமும் நன்மையும் ஏற்பட வேண்டும். நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் ஏற்படும் துன்பங்களுக்கு அமைதியை அளிக்கவல்ல நல்ல செயல்களையே நாங்கள் வேண்டுகிறோம்'' என்னும் பொருளை உடைய மந்திரம் காணப்படுகிறது. இந்த மந்திரம், சமூதாய ஒற்றுமைக்கு அடிக்கல்லாக விளங்குகிறது. உலக சகோதரத்துவத்தின் பெருமையையும் சிறப்பினையும் இது விளக்க வல்லதாகத் திகழ்கிறது.
பவபூதி என்பவர் எழுதியுள்ள 'மாலதி மாதவம்' என்னும் நாடகத்தில் (7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற வட மொழிக் கவிஞர்
"சிவமஸ்து ஸர்வ ஜகதாம்
பரஹிதநிரதா பவந்து பூதகணா >
தோஷா ப்ரயாந்து சாந்தி
ஸர்வ த்ர ஸுகம் பவது லோகே >>
என்னும் உயர்ந்த கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். உலகத்தில் அனைவருக்கும் எல்லாவிதமான ஸௌபாக்கியங்களும் இருக்க வேண்டும். பிறருக்கு நன்மையே செய்ய வேண்டும் என்னும் எண்ணம் வரவேண்டும். தவறுகள், குற்றங்கள் போன்றவை நீங்கப்பெற்று, எல்லா வழிகளிலும் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்க வேண்டும் என்பது இதன் பொருளாகும்.
"பாவ அத்வைதம் ஸதா குர்யாத்''
என்று சமூகத்தில் ஒற்றுமையுடன் அனைவரும் சேர்ந்து இருக்க வேண்டும் என்னும் எண்ணம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். 'நான்' என்பதைச் சற்றே விரிவுபடுத்தி, 'நாம்' என்னு எண்ணும் பழக்கமும் வர வேண்டும். பிறருக்கு உதவி செய்வதற்காகவே இவ்வுடல் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று வேதம் கூறுகிறது. இத்தகைய எண்ணமானது. (பிறருக்கு உதவ வேண்டும் என்னும் எண்ணம்
யாரிடத்திலும் பயனை எதிர்பார்க்காத அன்பைப் பொங்கச் செய்கிறது.
"வஸூதைவ குடும்பகம்''
"ஸர்வதேசே புவனத்ரயம்'' என்று
"பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே
பார்மிசை ஏதொரு நூலிது போலே'' (பாரதியார் - எங்கள் நாடு
என்று மகாகவியால் பாராட்டப்பெற்ற உபநிடதங்களில் அனைவருக்கும் ஒற்றுமை உணர்வு ஏற்பட வேண்டும். சகோதரத்துவம் வளர வேண்டும் என்னும் உயர்ந்த நோக்கத்தின் பின்னணியில், "இஷ்டம்'', "பூர்த்தம்'' என்று இரு செயல்முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வடமொழியின் நிகண்டான அமரகோசத்தில்
"த்ரிண்வய ருதுகர்மஷ்டம் பூர்தாதி கர்ம யத்''
என்று இவைபற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. இஷ்டம் என்றால் எல்லா உயிரினங்களுக்கும் நன்மை ஏற்பட வேண்டும் என்று செய்யப்படும் செயல்களும். பூர்த்தம் என்றால், கிணறு தோண்டுதல், குளங்களை வெட்டுதல், சாலைகளைச் செப்பனிடுதல், மரங்களை நடுதல், கல்வி நிலையங்களை ஏற்படுத்துதல், கோயில்களைக் கட்டுதல் போன்று அனைவரும் சேர்ந்து செய்யத்தக்க செயல்கள் ஆகும்.